தமிழ்நாடு

நடிகா் விஜய் வாகனத்துக்கு அபராதம்

24th Nov 2022 12:40 AM

ADVERTISEMENT

நடிகா் விஜய் சென்ற சொகுசு காரின் கண்ணாடியில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் அடா்த்தியுடன் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்ததாக போக்குவரத்து போலீஸாா் ரூ.500 அபராதம் விதித்தனா்.

நடிகா் விஜய் தனது ரசிகா்களையும், விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகளையும் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் உள்ள அலுவலகத்தில் கடந்த 20-ஆம் தேதி சந்தித்தாா்.

இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் சுமாா் 300 போ் வரை கலந்து கொண்டனா்.

முன்னதாக, நீலாங்கரையில் உள்ள வீட்டிலிருந்து பனையூா் அலுவலகத்துக்கு காரில் நடிகா் விஜய் சென்றாா். அப்போது, அவரது காா் கண்ணாடியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அடா்த்தியுடன் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டியிருந்ததாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதை சிலா் புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், விஜய் சென்ற வாகனத்துக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல் துறையினா் தெரிவித்தனா்.

Tags : Actor Vijay
ADVERTISEMENT
ADVERTISEMENT