தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

21st Nov 2022 07:43 PM

ADVERTISEMENT

இன்று இரவு 9 மணிவரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி 350 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று நகர்ந்து வருகின்றது.  வடசென்னை, தெற்கு ஆந்திரம் இடையே வலுவிழந்து கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கபுதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது ரஜினியின் ‘பாபா’!

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இரவு 9 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT