தமிழ்நாடு

பிரியா மரண வழக்கு: மருத்துவர்கள் தலைமறைவு; 3 தனிப்படைகள் அமைப்பு

19th Nov 2022 08:31 AM

ADVERTISEMENT

கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் தலைமறைவான மருத்துவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ரவிக்குமாா் - உஷாராணி தம்பதி மகள் பிரியா (17), சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தாா். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலியால், கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் நவ.7-இல் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அவரது வலது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் பிரியா கடந்த 15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் பால் ராம்சங்கா், சோமசுந்தா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் இருவா் மீதும் பெரவள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 

இதையும் படிக்க | கால்பந்து வீராங்கனை மரணம்: மருத்துவா்கள் இருவருக்கு முன் ஜாமீன் மறுப்பு

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கில் இரு மருத்துவா்களுக்கும் சென்னை உயா்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. 

தொடர்ந்து மருத்துவர்கள் இருவரும் தலைமறிவாகியுள்ளனர். மருத்துவர்களைப் பிடிக்க கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT