தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 12,500 கன அடியாக நீடிப்பு

19th Nov 2022 09:25 AM

ADVERTISEMENT

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 12,500 கன அடியாக நீடித்து வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை மாலை 3-வது நாளாக வினாடிக்கு 12,500 கன அடியாக நீடித்து வருகிறது.

நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  வினாடிக்கு 12,000 கன அடியாகவும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு   வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 39- வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT