தமிழ்நாடு

சென்னையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து: கர்ப்பிணி பலி

19th Nov 2022 01:19 PM

ADVERTISEMENT

 

சென்னை அண்ணா  சாலையில் கடலோர படை பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் குழந்தையும் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா சதுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாநில கல்லூரி அருகே காமராஜ் சாலையில் இரு சக்கர வாகனத்தில் நேப்பியர் பிரிட்ஜ் நோக்கி கடற்கரை அதிகாரி சிவா கர்ப்பமாக இருந்த தனது மனைவி  லலிதாவை (22) அழைத்து சென்றுள்ளார்.

அப்போது பின்னால் வந்த கடலோர படை (Indian Navy) பேருந்து இடது பக்கத்தில் இடித்ததில்  இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், பேருந்தில் பின் சக்கர வாகனம்  பெண்ணின் தலையில் மீது ஏறி சம்பவ இடத்திலே இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள்,  வாகன ஓட்டிகள்  பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இறந்து போன நிறைமாத கர்ப்பிணி என்பதால் மேற்படி உடலை கைப்பற்றி குழந்தையையாவது  காப்பாற்றுவதற்காக  அருகில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தாயும் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT