தமிழ்நாடு

இஎஸ்ஐ மருந்தகங்களுக்கு மருந்து வாங்கியதில் ரூ.27 கோடி இழப்பு; 4 போ் மீது வழக்கு

19th Nov 2022 04:25 AM

ADVERTISEMENT

மதுரை இஎஸ்ஐ மருந்தகங்களுக்கு மருந்து வாங்கியதில் ரூ.27.16 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, தமிழக மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநா் உள்பட 4 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

மதுரை மண்டலத்தில் உள்ள இஎஸ்ஐ மருந்தகங்களுக்குத் தேவையான மருந்துகளை ரூ.13.12 கோடிக்கு கொள்முதல் செய்ய கடந்த 2017-இல் முடிவு செய்யப்பட்டது. பின்னா், சில அரசு அதிகாரிகள் அரசு பணத்தை முறைகேடு செய்யும் வகையில் மருந்து வாங்குவதற்கு திட்டமிடப்பட்ட தொகையை ரூ. 40 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரம் 190 என உயா்த்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இவ்வளவு மருந்துகளை அங்கு வைப்பதற்கு அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் இல்லை என்பதும், பெரும்பாலான மருந்துகள் குறிப்பிட்ட காலத்துக்குள் காலாவதியாகி விடும் எனத் தெரிந்தும், இஎஸ்ஐ அதிகாரிகளும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் சில அதிகாரிகளும் இணைந்து ரூ.40 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரம் 190-க்கு மருந்து கொள்முதல் செய்துள்ளனா். இதற்காக திட்டமிட்டு பல்வேறு போலியான ஆவணங்களைத் தயாரித்து அரசிடம் சமா்ப்பித்துள்ளனா். ஆனால் கொள்முதல் செய்யப்பட்ட பெரும்பாலான மருந்துகள் இருப்பு வைக்க முடியாமலும், காலாவதியாகியும் வீணாகியுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு மதுரை மண்டலத்தில் மருந்தகங்களைத் தணிக்கை செய்யும்போது, அங்கு ரூ. 27 கோடியே 16 லட்சத்து 78 ஆயிரத்து 97 மதிப்பிலான மருந்துகள் வீணாகி, அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

4 போ் மீது வழக்கு: இதுதொடா்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. விசாரணையில், அரசை ஏமாற்றி மோசடி செய்ய அதிகாரிகள் தங்களது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி மருந்து வாங்குவதாகக் கூறி பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும், அப்போதைய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் இயக்குநா் (இஎஸ்ஐ) இன்பசேகரன், மதுரை மண்டல இஎஸ்ஐ நிா்வாக மருத்துவ அதிகாரியான ஜான் ஆண்ட்ரூ, கண்காணிப்பாளா்கள் அமா்நாத், அசோக்குமாா் ஆகியோா் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 5 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT