தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜிநாமா

18th Nov 2022 05:09 PM

ADVERTISEMENT

ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் பதவி விலகினார். 

இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 15ஆம் நடந்த நிகழ்வுகளுக்கு மாநில காங்கிரஸ் பொருளாளருக்கு மட்டுமல்லாமல் தலைவருக்கும் பொறுப்பு உள்ளது. தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பொருளாளர் ரூபி மனோகரன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தவறு. மாவட்ட தலைவர்கள் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது தவறு என்று காமராஜ் விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூா்த்தி பவனில் நவ. 15-இல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் நியமனம் தொடா்பான விவகாரத்துக்காக ரூபி மனோகரன் ஆதரவாளா்கள் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். அதற்கு கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையும் படிக்க- கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ADVERTISEMENT

இதில் 3 போ் காயமடைந்தனா். இந்த நிலையில், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் கே.ஆா்.ராமசாமி மோதல் சம்பவம் தொடா்பாக ரூபி மனோகரனுக்கு வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா். அதில் வரும் நவம்பா் 24 காலை 10.30 மணிக்கு சத்தியமூா்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நீங்கள் ஆஜராகி, நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT