தமிழ்நாடு

ராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம்! அரசு செலவில் 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு

18th Nov 2022 10:17 AM

ADVERTISEMENT

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு 200 பேரை அழைத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

தமிழகத்தில் மூத்த குடிமக்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

இந்நிலையில், முதற்கட்டமாக 200 பேரை அழைத்துச் செல்வதற்கான சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் இன்று வெளியிட்டுள்ளார். 

இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 பேர் என மொத்தம் 200 பேரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதற்காக 20 மண்டலங்களில் தலா 10 பேரை தேர்வு செய்து ஆணையர்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

காசிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் 60-70 வயதுடையவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள்ளாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT