தமிழ்நாடு

நாளை நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலை.

18th Nov 2022 04:45 PM

ADVERTISEMENT

நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் குரூப் -1 முதல்நிலைத் தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. 

இதையும் படிக்க- ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிக்கிறது ஜாக்பாட்

முன்னதாக வினாத்தாள் குளறுபடியால் இன்று நடைபெறவிருந்த தேர்வையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழகத்திற்குள்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT