நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 19-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என்பதால் வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படிக்க: மோகினியாக ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா!
இதன்காரணமாக, மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கும்பகோணத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.