தமிழ்நாடு

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: வழக்கு பிரிவு மாற்றம்

18th Nov 2022 09:34 AM

ADVERTISEMENT

 

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சையின்போது உயிரிழந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெரவள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். 

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அறுவை சிகிச்சை பலன் அளிக்காமல் அவா் உயிரிழந்தாா். 

பிரியா உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

ADVERTISEMENT


இதையும் படிக்க | கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

இந்நிலையில், பிரியா  உயிரிழந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குப் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT