தமிழ்நாடு

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு!

18th Nov 2022 07:49 PM

ADVERTISEMENT


மாணவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ளும் வகையில் கல்லூரி பேராசிரியர்கள் மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 
கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், உயர்கல்வி நிறுவன பதிவாளர்களுக்கு இது தொடர்பாக உயர் கல்வித் துறை கடிதம் எழுதியுள்ளது.

அதில், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு, மாணவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில், சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கியை அணிய வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT