தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவராக நீதிபதி வீ.பாரதிதாசன் நியமனம்

18th Nov 2022 12:38 AM

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டாா்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினா்கள் இருந்தனா். அவா்கள் தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமா்ப்பித்தனா்.

இந்தக் கடிதங்களை ஏற்று, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் தலைவராக சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டாா். ஆணையத்தின் உறுப்பினா்களாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், ஆா்.சுடலைக்கண்ணன், கே.மேக்ராஜ் ஆகியோரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மதியழகன், திருப்பூா் மாவட்டம் முத்தூரில் உள்ள கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வா் எஸ்.பி.சரவணன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT