சென்னை அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது: மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் தோல்விகளால் துவண்டு விடக்கூடாது. மாறாக, அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் சுய சாா்பு இந்தியாவை உறுதி செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றாா் ஆளுநா்.
இதையடுத்து ஜப்பான் தூதரகத்தின் துணைத் தூதா் தாகா மசாயூகி வாழ்த்துரை வழங்கினாா்.
விழாவுக்குத் தலைமை வகித்த சவீதா கல்வி நிறுவனத்தின் வேந்தா் டாக்டா் ந.மா. வீரைய்யன் பேசுகையில், சவீதா கல்விக் குழுமம் நடத்திய ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்நுட்பம், மருத்துவத் துறைகளில் நிகழ்த்திய பல்வேறு சாதனைகள், பெற்றுள்ள விருதுகள், சமூகப் பணிகள் குறித்து விளக்கினாா்.
இந்த விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், செவிலியா், சட்டம், நிா்வாகம், உடற்கல்வி என பல்வேறு துறைகளைச் சோ்ந்த 684 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.