அரசு மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை நேரில் ஆறுதல் கூறினாா்.
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தைத் தொடா்ந்து அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சித் தலைவா்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், சென்னை வியாசா்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு ஜி.கே.வாசன் நேரில் வந்தாா். அங்கு வைக்கப்பட்டிருந்த பிரியாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கும் ஆறுதல் தெரிவித்தாா்.