தமிழகத்தில் கரோனா தொற்றால் மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
சென்னையைச் சோ்ந்த 58 வயது நபா் ஒருவா் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி, தனியாா் மருத்துவமனையில் பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பிறகு கரோனா இறப்பு பதிவாகியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, வியாழக்கிழமை 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 10 பேருக்கும், கோவை, செங்கல்பட்டில் தலா 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 578- ஆக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, 88 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,55,086-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,049-ஆக உள்ளது.