தமிழ்நாடு

வெங்கச்சேரி செய்யாற்றில் தற்காலிக பாலம் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

15th Nov 2022 10:47 AM

ADVERTISEMENT

வெங்கச்சேரி செய்யாற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதும் தற்காலிக பாலம் சேதமாகி உள்ளதால் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழக முழுவதும் துவங்கும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மூன்று தினங்களுக்கு முன் அறிவித்து. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியது.

இதையும் படிக்க.. காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

கடந்த 14 நாள்களில் காஞ்சிபுரம் பகுதியில் 304 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 308 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 204 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 380 மில்லி மீட்டர் என மொத்தம் 2112 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 33.8 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 11.60 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 31 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 13 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 0 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 15.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க.. 35 துண்டுகளாக்கப்பட்ட காதலி: காதலனின் திடுக்கிடும் வாக்குமூலம்; திரில்லர் படத்துக்கு சற்றும் குறையாத சம்பவங்கள்

கடந்த இரண்டு நாள்களாக உத்திரமேரூர் சுற்றுப்பகுதியில் கன மழை பெய்ததும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப்பகுதியில் மழை பெய்த காரணமாக  மாகரலை செய்யாற்றில் நேற்று காலை 9 மணி வரை குறைந்த அளவை நீர் சென்று இருந்த நிலையில் திடீரென பத்து மணியளவில் அதிக அளவு நீர்வரத்து துவங்கியது.

உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கச்சேரி, காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாகரலை இணைக்கும் செய்யாற்று பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக பாலம் சேதம் அடைந்தது,

இந்நிலையில் இன்று காலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்களாகிய பேருந்து, லாரி மற்றும் கார் பாதுகாப்புக் கருதி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்பவர்கள் மாகரலில் இறங்கி பாலத்தை நடந்து சென்றும், வெங்கச்சேரியிலும் அதேபோல் உத்திரமேரூர் இருந்து காஞ்சிபுரம் செல்பவர்கள் வெங்கச்சேரியில் இறங்கி பாலத்தைக் கடந்து மாகரல் சென்று மாற்றுப் பேருந்து செல்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் பேருந்துகள் இருபுறமும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அச்சத்துடனே பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க மாகரல் காவல்துறையினர் பாதுகாப்பு தடுப்பு அரண்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக இரு புறமும் சிறிது நேரம் என மாறி மாறி சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாலத்தின் பொதுமக்கள் பயணிக்கும் நிலையை தவிர்க்கும் நோக்கில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடை செய்த நிலையில் அரசு போக்குவரத்து கழகங்கள் குறைந்த அளவே பேருந்துகளை இயக்குவதும் தனியார் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டும் செயல்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட மக்கள் பெரிதும் காத்திருக்கும் நிலையும் பேருந்து வருகையின் போது ஆபத்தான நிலையில் பயணிக்க ஓடுவதும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வெங்கச்சேரி செய்யாற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதும் தற்காலிக பாலம் சேதமாகி உள்ளதால் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குறைந்த அளவே அரசுப் பேருந்துகள் இயங்குவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலை உயிரினங்கள் அரசு ஊழியர்கள் அவதி அடைந்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT