தமிழ்நாடு

ரூ. 40 ஆயிரத்தை நெருங்கும் தங்கத்தின் விலை! சவரனுக்கு ரூ. 312 உயர்வு

15th Nov 2022 12:16 PM

ADVERTISEMENT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.39,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.39 உயர்ந்து ரூ.4,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த நவ. 10 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 38,560 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 40,000-யை எட்டியுள்ளது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து  ரூ.68.50 -க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 உயர்ந்து ரூ.68,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மிசோரத்தில் கல்குவாரி சரிந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி! இன்னும் 4 பேரைத் தேடும் பணி தீவிரம்

ADVERTISEMENT
ADVERTISEMENT