தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பகல் 1.30 மணிவரை இடி, மின்னலுடன் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10.30க்கு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை காலமானார்!
மேலும், நாளை வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் நவம்பர் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.