தமிழ்நாடு

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு

14th Nov 2022 08:02 PM

ADVERTISEMENT

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 25 பேருக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னீஸ் வீரர் சரத் கமலுக்கு 'மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது'  அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் சீமா பூனியா, பேட்மிண்டனில் லக்‌ஷயா சென், பினாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சயனைடை விட 6000 மடங்கு கொடிய நச்சுத் தாவரம் பூங்காவில் வளர்ப்பு!

ADVERTISEMENT

விளையாட்டு வீரர்களுக்கான விருதுகளை வரும் 30 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT