தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!

14th Nov 2022 09:02 AM

ADVERTISEMENT


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாகவும், குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 

இதையும் படிக்க | தமிழகத்தில் இரு நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை: மீனவா்களுக்கு எச்சரிக்கை

திங்கள்கிழமை அதிகாலையில் பேரருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததைத் தொடா்ந்து குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT