தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்(முழு விவரம்)

1st Nov 2022 05:18 PM

ADVERTISEMENT

மழை நீர் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், இரண்டு சுரங்கப்பாதைகள் மற்றும் சில சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

வடக்கிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் மாலை 04.00 மணி நிலவரம்.

ADVERTISEMENT

1. மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:-

a) கணேசபுரம் சுரங்கப்பாதை
b) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

2. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது:-

a) அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.
b) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை என்பது இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே சுரங்கப்பாதையாகும். இந்த மழைநீர் தேக்கத்தினால் இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாலையில் மழை அதிகரிக்கும்! 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

3. மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:-

a) சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு, காந்தி நகர் ரவுண்டானா வழியாக பேசின்பிரிட்ஜ் பாலாத்தின் மேலே சென்று வியாசர்பாடி சுரங்கம்பாதை வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
b) புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி, அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
c) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்:-

a) சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை சென்னையிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்டராகான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து திருப்பி விடப்பட்டு, ஓட்டேரி வழியாக பெரம்பூர் மார்கமாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
b) சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளை புளியந்தோப்பிலிருந்து சென்னையை நோக்கி கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்களை அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர் மேம்பாலம் வழியாக ஜமாலியா ரோடு, ஓட்டேரி,
அயனாவரம் செல்வதற்கு வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT