தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

1st Nov 2022 07:57 AM

ADVERTISEMENT

சென்னை: பலத்த மழை பெய்து வருவதால் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திருவாரூர், நாகை, காரைக்கால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

ADVERTISEMENT

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை காரணமாக திருவண்ணாமலையில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யாறு, வெண்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டுவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இந்த நிலையில், தமிழகத்தில் வேலூா், திருவள்ளூா் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT