தமிழ்நாடு

21வது நாளாக 120 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை நீர் மட்டம் 

1st Nov 2022 08:12 AM

ADVERTISEMENT

 

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000கன அடியாக அதிகரித்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் நீர்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், இன்று 21 வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT