தமிழ்நாடு

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் கடையில் தீ: பொருள்கள் நாசம்

1st Nov 2022 12:58 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பூஜைப் பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்தில், பொருள்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் அருகே பெரியசாமி என்பவர்  பூஜைப் பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாராம். 

இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலையில் கடைத் தீப்பிடித்து எறிந்ததாம்.  இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இத்தீவிபத்தில் கடையில் உள்ள அனைத்து பூஜைப் பொருள்கள் மற்றும் கொலு பொம்மைகள் எரிந்து சேதமடைந்தது.

இதையும் படிக்க: குடிப்பதைக் கண்டித்ததால் அத்தையை அடித்துக்கொன்ற சிறுவன் கைது

இதுகுறித்து  மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.‌

ADVERTISEMENT
ADVERTISEMENT