தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

1st Nov 2022 01:01 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் வேலூா், திருவள்ளூா் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT