தமிழ்நாடு

மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

1st Nov 2022 12:58 AM

ADVERTISEMENT

சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு மானியத்தில் சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10 குதிரைத்திறன் வரையிலான 5 ஆயிரம் பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் அளிக்கப்பட உள்ளன. ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரியமின் சக்தி பம்புசெட்டுகள் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ,  இணையதளங்களின் வழியாகவே விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அல்லது மாவட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆதாா் அட்டை நகல், புகைப்படம், சொந்த நிலத்துக்கான சிட்டா மற்றும் அடங்கல், ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், ஜாதிச் சான்றிதழ், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT