தமிழ்நாடு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

31st May 2022 12:59 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையானது விவசாயத்திற்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றது. வழக்கமாக ஜூன் முதல் தேதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

ஆனால், மூன்று நாள்கள் முன்னதாகவே மே 29ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க |  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

முன்னதாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 15 நாள்களுக்கு முன்னதாகவே மே 16ஆம் தேதி தொடங்கி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT