தமிழ்நாடு

தமிழகத்திற்கான ரூ. 9, 602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

31st May 2022 05:53 PM

ADVERTISEMENT

தமிழகத்திற்கான ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.

மே 31, 2022 வரை மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஜனவரி 2022 வரை கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 47,617 கோடியும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி தொகையான 21,322 கோடியும் அடங்கும்.

இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக

ADVERTISEMENT

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்திற்கு ரூ. 14,145 கோடி, தமிழகத்திற்கு ரூ. 9,602 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 8,874 கோடி வழங்கப்பட்டுள்ளது.

Tags : GST Tamilnadu
ADVERTISEMENT
ADVERTISEMENT