தமிழ்நாடு

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தம்

31st May 2022 08:36 AM

ADVERTISEMENT

சென்னை:  தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத லாபம் மற்றும் கமிஷன் தொகையை உயர்த்தியும், மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக தில்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட  24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT