சென்னை, வண்டலூரில் இயங்கிவரும் விஐடி பல்கலையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கும், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ள நிலையில், தற்போது விஐடி கல்லூரியிலும் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது.
விஐடி கல்லூரியில் மொத்தம் 5,670 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், 2,900 மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
கரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்லூரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.