தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

31st May 2022 01:09 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

தென் தமிழகம் மற்றம் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. 

31.05.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

நீலகிரி, கோவைஇ திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

01.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

02.06.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
பெய்யக்கூடும். 

03.06.22, 04.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செ.மீ)

பந்தலூர் தாலுகா அலுவலகம் 10, தேவாலா 8, புள்ளம்பாடி 6, தருமபுரி, வூட் பிரையார், கீழநிலை, நந்தியார், நாவலுர் கோட்டப்பட்டு, சிறுகமணி தலா 4, அரிமளம், கோத்தகிரி, நாட்றம்பள்ளி, திருச்சி டவுன் தலா 3, எடப்பாடி, சுருளக்கோடு, கொடைக்கானல், மாயனூர், அவலாஞ்சி, மணப்பாறை, மாயனூர், ஜெயம்கொண்டம், கும்மிடிப்பூண்டி, சிவலோகம் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

31.05.22: தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் - தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT