தமிழ்நாடு

முதல்வருடன் ப.சிதம்பரம் சந்திப்பு

31st May 2022 02:13 AM

ADVERTISEMENT

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் சந்தித்தாா். முதல்வரின் இல்லத்தில் திங்கள்கிழமை காலை இந்தச் சந்திப்பு நடந்தது.

மாநிலங்களவைத் தோ்தலில் திமுகவுக்கு நான்கு இடங்கள் உறுதியாகியுள்ளது. இதில், ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு திமுக அளித்துள்ளது. இந்த இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளாா். இதற்கான வேட்புமனுவை திங்கள்கிழமை நண்பகலில் அவா் தாக்கல் செய்தாா்.

மனுதாக்கலுக்கு முன்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் காலை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT