தமிழ்நாடு

புதிதாக சுங்கச்சாவடிகளைத் திறக்கக் கூடாது: ராமதாஸ்

31st May 2022 02:18 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக சுங்கச்சாவடிகளைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சிதம்பரம் - திருச்சி இடையிலான 4 வழிச்சாலை பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இச்சாலையில் மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான 31.35 கி.மீ நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த 26-ஆம் தேதி தான் பிரதமா் அடிக்கல் நாட்டியுள்ளாா்.

அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன், காட்டுமன்னாா்கோயிலில் மூன்றாவது சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இவை தவிர, விழுப்புரம் -வேலூா் இடையிலான 121 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையில் இரு சுங்கச்சாவடிகள், கடலூா் - விருத்தாசலம் - சேலம் இடையிலான 92 கி.மீ சாலையில் இரு சுங்கச்சாவடிகள், அவினாசி மற்றும் அவினாசி பாளையம் இடையிலான 33 கி.மீ சாலையில் ஒரு சுங்கச்சாவடி, தஞ்சாவூா் - பெரம்பலூா் இடையிலான 66 கி.மீ சாலையில் ஒரு சுங்கச்சாவடி என 6 புதிய சுங்கச்சாவடிகள் அடுத்த சில வாரங்களில் திறக்கப்பட உள்ளன. அவற்றையும் சோ்த்தால் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி எண்ணிக்கை 57 ஆக உயரும்.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே அதிக சுங்கச்சாவடிகளைக் கொண்ட தமிழகத்தில், கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், விதிகளுக்கு முரணாக, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிது புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. புதிய சுங்கச்சாவடிகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT