தமிழ்நாடு

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

31st May 2022 02:10 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தற்போது வரை குரங்கு அம்மை பாதிப்பில்லை என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கோவையில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு ஏதும் இல்லையென்றாலும் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனா்.

அண்மையில் பிரிட்டனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அவரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புணேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் குரங்கு அம்மை பாதிப்பில்லை என்ற முடிவே கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை குரங்கு அம்மை பாதிப்பில்லை மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT