தமிழ்நாடு

ஏற்காடு கோடை விழாவுக்குச் சென்ற மாருதி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

DIN

ஏற்காடு கோடை விழாவுக்குச் சென்ற மாருதி வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் ஏற்காடு கோடை விழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்

இந்த நிலையில் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் நியாஸ் ஆகிய இருவரும் ஏற்காடு கோடை விழாவில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஐந்து ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது சேலம் மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து வேன் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. 

இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை முற்றிலும் அணைத்தனர். இதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. 

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கார் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT