தமிழ்நாடு

முடியாததை முடித்துக் காட்டுபவர் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான்: அமைச்சர் துரைமுருகன்

28th May 2022 06:31 PM

ADVERTISEMENT

முடியாததை முடித்துக் காட்டுபவர் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான் என்று  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது, கருணாநிதியின் சிலையை பார்க்கும் போது நெஞ்சம் உருகிவிட்டது. நம்முடன் கருணாநிதி நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

முடியாததை முடித்துக் காட்டுபவர் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான், ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான். எங்களைப் போல் வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர்.

இதையும் படிக்க- அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு

ADVERTISEMENT

கருணாநிதி சிலை எங்கே, ஏன் இருக்க வேண்டும் என்று சிந்தித்து முடிவு எடுத்தவர் முதல்வர். சட்டப்பேரவை நடக்கும் இடமாக மாற்றி ஒரு மகத்தான கட்டடத்தை எழுப்பியவர் கருணாநிதி. காமராஜர், பெரியார், அண்ணா சிலைகளை தொடர்ந்து கருணாநிதி சிலை அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT