தமிழ்நாடு

சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

28th May 2022 05:37 PM

ADVERTISEMENT

ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சனிக்கிழமை (மே 28) திறந்து வைத்தார்.

இதையும் படிக்க | அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அவருக்கு ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முழு உருவச் சிலை எழுப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

ரூ.1.56 கோடி செலவில், 16 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு புதிய விதிகள் உருவாக்க குழு

தமிழக அரசு சாா்பில் முதல்முறையாக முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு சிலை எழுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT