தமிழ்நாடு

கோடை விழாவில் களைக்கட்டிய நாய் கண்காட்சி

DIN

ஏற்காடு கோடை விழா கடந்த நான்காவது நாளாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாய்கள் கண்காட்சி கால்நடை துறை சார்பில் இன்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியையொட்டி மாநில மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீடுகளில் வளர்க்கப்பட்ட செல்லப் பிராணிகளான அல்சேஷன் பொமரேனியன் ஜெர்மன் ஷெப்பர்ட் டாபர்மேன் லேப்டாப்  பக்  புல் டாப் பாக்சர் காக்கர் நாட்டு நாய்களான ராஜபாளையம் கோம்பை சிப்பிப்பாறை போன்ற பல்வேறு வகையான நாய்கள் கண்காட்சியில் இடம்பெற அழைத்து வரப்பட்டது. 

மேலும் காவல் துறையினர் சார்பில் வழங்கப்படும் மோப்ப நாய்களும் ஏற்காட்டில் மிகப்பெரிய எஸ்டேட்களில் காவலுக்காக வளர்க்கப்படும் நாய்களும் காட்சிக்காக இடம்பெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் நாய்களின் செயல்திறன் நுகர்வுத் தன்மை உரிமையாளர்களின் கட்டளைக்கு அடிபணிவது மற்றும் குற்ற சம்பவங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது

இதில் சிறந்த முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நாய்களுக்கு சிறப்புப் பரிசுகள் கால்நடைத்துறை சார்பில் வழங்கப்பட்டது

இதேபோல் செல்லப்பிராணிகள் வகைகளில் கிளி பறவைகள் பூனைகள் உள்ளிட்ட இதர வீட்டு விலங்குகளும் குதிரை ஆடு உள்ளிட்டவைகளும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றது. 

இந்த நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து, அதனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

SCROLL FOR NEXT