தமிழ்நாடு

அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

28th May 2022 05:17 PM

ADVERTISEMENT

பாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கும் அன்புமணியை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்டித் தழுவி கண்ணீர்மல்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படிக்க- பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்

பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கட்சிக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பொருட்டு, பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுளளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT