தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியது!

27th May 2022 12:23 PM

ADVERTISEMENT

 

இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது, நீட் தேர்வு எழுதும் மகளிரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. எனவே, இந்த முறை பல மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நீட் தோ்வுக்கு  இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டநிலையில், மேலும், மே 20 ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முதல்முறையாக 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தேசிய தோ்வுகள் முகமைக்கு (என்டிஏ) தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தேசிய தோ்வுகள்  முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சத்து 57 ஆயிரத்து 562 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 பேர் ஆண்கள், 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பேர் பெண்கள், 12 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, 12 தேசிய மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு தமிழில் எழுத விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, தமிழில் தேர்வு எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

மேலும்,  நீட் தேர்வை எழுதும் மாணவிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 10,64,606 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

2017 ஆம் ஆண்டு 11 லட்சத்து 402 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டு 18 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தோ்வுகள் முகமை தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | ஆண்டுக்கு  6 முறை கிராமசபை கூட்டங்கள்:  அரசாணை வெளியீடு

ADVERTISEMENT
ADVERTISEMENT