தமிழ்நாடு

2020-இல் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்

27th May 2022 03:18 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் கடந்த 2020-இல் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,20,806 போ் பலியாகினா். காயமடைந்தவா்கள் 3,48,279 போ்.

இதில் அதிகப்படியாக சாலை விபத்துகளில் (45,484) தமிழகமும், அதிபடியான உயிரிழப்பில் (19,149) உத்தர பிரதேசமும் முதலிடத்தில் வகிக்கின்றன என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக அதிகப்படியான விபத்துகள் நிகழும் மாநிலமாக நீடித்து வருகிறது.

ADVERTISEMENT

‘இந்தியாவில் 2020-இல் பதிவான சாலை விபத்துகள்’ என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், நாட்டில் கடந்த 2020-இல் 1,20,806 அபாயகரமான விபத்துகள் நடைபெற்ாகவும் இதில் 43,412 (35.9 சதவீதம்) தேசிய நெடுஞ்சாலையிலும், 30,171 (25 சதவீதம்) மாநில நெடுஞ்சாலைகளிலும், 47,223 (39.1 சதவீதம்) பிற சாலைகளிலும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் பதிவான 1,37,689 விபத்துகளைக் காட்டிலும் 2020-இல் 12.23 சதவீதம் குறைவாகவே விபத்து வீதம் பதிவாகியுள்ளது.

சாலை விதிகளைப் பின்பற்றாததால், 85,032 (64%) விபத்துகள் நிகழ்ந்தன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020-ஆம் ஆண்டு சாலை விபத்தில் முதல் பத்து மாநிலங்கள்

மாநிலம் விபத்துகள் (சதவீதம்) உயிரிழப்பு

தமிழ்நாடு 45,484 (12.4%) 7,039

மத்திய பிரதேசம் 45,266(12.36%) 11,141

உத்தர பிரதேசம் 34,176 (9.3%) 19,149

கா்நாடகம் 34,176 (9.3) 9,760

கேரளம் 27,877 (7.6%) 2,979

மகாராஷ்டிரம் 24,971 (6.8%) 11,569

ஆந்திர பிரதேசம் 19,509 (5.3%) 7,039

தெலங்கானா 19,172 (5.2%) 6,882

ராஜஸ்தான் 19,114 (5.2%) 9,250

குஜராத் 13,398 (3.7%) 6,170

(10 மாநிலங்கள்) 2,83,212 (77.4%) 90,978

மொத்தம் 3,66,138 1,31,714

பலியானவா்களின் வயது

18-45 69%

18-60 87.4%

விபத்துகள் நிகழ்ந்த இடம்

தேசிய நெடுஞ்சாலை 1,16,496 (31.8%)

மாநில நெடுஞ்சாலை 1,58,887 (43.4%)

பிற சாலைகள் 90,755 (24.8%)

பலியான ஆண் ஓட்டுநா்கள் பெண் ஓட்டுநா்கள்

56,334 (97.3%) 1,551 (2.7%)

பலியான ஆண் பயணிகள் பெண் பயணிகள்

35,552 (77%) 10,624 (23%)

ஓட்டுநா் உரிமமின்றி நேரிட்ட விபத்துகள்

2019 44,358

2020 34,854

தலைக்கவசம் அணியாததால் பலி - 39,589 ஓட்டுநா்கள்

காயமடைந்தோா் - 90,393

சீட் பெல்ட் அணியாததால் பலி -15,146

காயமடைந்தோா்- 39,102

ஊரக பகுதி விபத்துகள் - 68%

நகா்ப்புற விபத்துகள் - 32%

இருசக்கர வாகன விபத்தில் பலி -

2018 - 55,336 2019 - 57,282 2020- 57,282

காா், டாக்ஸி, வேன் விபத்துகளில் பலி

2018 - 25,115 2019 - 23,900 2020- 18,095

காரணம் விபத்து பலி

அதிவேகம் 41,540 9,003

தவறான வழியில் ஓட்டுதல் 2,272 659

மது அருந்தியதால் 1,477 390

கைப்பேசி பயன்பாடு 1,101 369

நேரான சாலைகளில் விபத்து 65%

குழி நிறைந்த, வளைந்த, செங்குத்தான சாலைகளில் நிகழ்ந்த விபத்து 15.2%

வாகனங்கள் நேருக்கு நோ் மோதல் 20.1%

பின்புறம் மோதி நிகழ்ந்த விபத்து 19.9%

விபத்தில் சிக்கிய பழைமையான வாகனங்கள்

10 ஆண்டுகளுக்கு கீழ் 50%

10-15 ஆண்டுகள் 12.8%

15 ஆண்டுகளுக்கு அதிகம் 12%

ADVERTISEMENT
ADVERTISEMENT