தமிழ்நாடு

16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

27th May 2022 03:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், பெரம்பலூா் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 27) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை ( மே 27) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், பெரம்பலூா் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 28: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 28-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மே 29, 30: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 29, 30 ஆகிய இரண்டு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

லட்சத்தீவு, கேரளம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் வெள்ளிக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT