தமிழ்நாடு

10 இடங்களில் வெயில் சதம்

27th May 2022 02:30 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் 9 இடங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பநிலை வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, கரூா்பரமத்தி, கடலூரில் தலா 104 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், வேலூரில் தலா 102 டிகிரியும், திருச்சியில் 101 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமானநிலையம், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா 100 டிகிரியும் பதிவானது. புதுச்சேரியில் 100 டிகிரியை தாண்டியது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT