தமிழ்நாடு

தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுவது வரவேற்கத்தக்கது: ஜி.கே.வாசன்

27th May 2022 12:43 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு செயல்படுவது பாராட்டுக்குரியது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் வளா்ச்சிக்காக மத்திய பாஜக அரசு தொடா்ந்து செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்களுக்காக பல துறைகளில் வளா்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் அந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் ரூ.31 ஆயிரம் கோடியில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை பிரதமா் மோடி தமிழகத்துக்காகத் தொடக்கி வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும்.

ADVERTISEMENT

வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த புதிய திட்டங்களைத் தொடக்கி வைத்துள்ளதற்காக பிரதமருக்கு நன்றி என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT