தமிழ்நாடு

சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு: இளைஞர்கள் 2 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

26th May 2022 11:55 AM

ADVERTISEMENT

 

சிறுமியை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்ததாக அருண்குமார் அவரது நண்பர் பாலா ஆகிய இருவரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அதற்கு அவரது நண்பர் பாலா உதவி செய்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த சிறுமியிடம் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயர் ராதாவிடம் தெரிவிக்கவே, ராதா கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ADVERTISEMENT

சிறுமியின் தயார் அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து, அருண் குமார் மற்றும் பாலா இரண்டு பேரையும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இதையும் படிக்க | திருவள்ளூர் அருகே சரக்கு லாரியில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து நாசம்

ADVERTISEMENT
ADVERTISEMENT