தமிழ்நாடு

தமிழ் கலாசாரம் உலகளாவியது: பிரதமர் நரேந்திர மோடி

26th May 2022 07:20 PM

ADVERTISEMENT


தமிழ்நாட்டில் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் கலாசாரம் உலகளாவியது என்றார்.

சென்னையில் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவின் தொடக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உரையாற்றினார். இதன்பிறகு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், திராவிட மாடல் குறித்த விளக்கம், கட்சத்தீவை மீட்பது, நீட் தேர்வு ரத்து மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து, ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொன்றாகத் தொடக்கி வைத்தார்.

ADVERTISEMENT

இதன்பிறகு, பிரதமர் மோடி பேசியதாவது:

"ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்கள், சகோதர, சகோதரிகளே வணக்கம். மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருவது எப்போதுமே மிக அருமையாக இருக்கும். இது மிகவும் சிறப்பான பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி சிறப்பானவை.

பாரதியார், செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருக்கிறார்.

ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் எவரேனும் ஒருவர் எப்போதுமே தலைசிறந்தவராக செயல்படுகிறார். சமீபத்தில் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் குழுவிடம் பேசினேன். இந்த முறை ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது.

இதில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில், 6 பதக்கங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்பு உள்ளது.

தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது

சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது."

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT