தமிழ்நாடு

குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

சென்னை: குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 7.01 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கரோனா முதல் தவனை தடுப்பூசியை 93.76 சதவீதம் பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர்.

ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் இடஙகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை. 

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததில், சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆகவே வந்துள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT