தமிழ்நாடு

பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்

26th May 2022 05:39 PM

ADVERTISEMENT

ஐ.என்.எஸ். கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க இன்று(வியாழக்கிழமை) சென்னை வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். 

சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு தளத்துக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

ADVERTISEMENT

இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து சாலை வழியாக நேரு விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 5.45 மணியளவில் வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 5 புதிய திட்டங்களை தொடக்கிவைக்கிறார். 

இதையும் படிக்க | ரூ.31,500 கோடி திட்டங்கள் இன்று தொடக்கம்: பிரதமா் மோடி, முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT