தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ.320 குறைந்தது

26th May 2022 10:44 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.  

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. புதன்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.66.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, 66,200 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து, ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, கிலோ ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | சென்னையில் இன்று டிரோன்கள் பறக்கத் தடை

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT